இரண்டாம் நாள் 13.06.2011 (திங்கட்கிழமை)

இரண்டாம் நாள் நம் நிலைய மாணவர்கள் புகழ்பெற்ற பாரதியார் பல்கலைக் கழகத்திற்குச் சென்றனர். அவர்களைப் பல்கலைக் கழகத் துணை வேந்தரும் பேராசிரியப் பெருமக்களும் மக்கள் தொடர்பு அதிகாரிகளும் இன்முகத்துடன் வரவேற்றனர். மாணவர்களுக்குச் சிறப்புத் தகுதிக் கூட்ட அறையில் கலந்துரையாடல் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துணை வேந்தர் தமிழ் மொழியின் சிறப்பினை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

அதன் பின்னர் மாணவர்கள் தமிழ்த்துறையைப் பார்வையிட்டனர். தமிழ்த்தொடர்பு கருத்துருவாக்கங்களுக்குக் கணினியின் பயன்பாடு பற்றிய செய்திகளை ஆராய்ச்சி மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டனர்.  

ஆராய்ச்சிக்கூடங்களுக்குச் சென்று நவீன உருப்பெருக்கிகள் பற்றிய செய்திகளையும் மருத்துவ ஆய்வு பற்றிய செய்திகளையும் தமிழில் விளக்கும் ஆற்றலைப் புரிந்துகொண்டனர். தங்களின் சந்தேகங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டனர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

S P Jeyarajadas Pandian said...

Dear Students

I am really proud to see you all in such an environment. Keep the spirit going! I am sure you are enjoying the trip... more to come by..
Enjoyed Ooty...sure you had good time!

Thanks to Mr Guru and Mdm Soodi for the update.

Best regards!

S P Jeyarajadas

Rajeswaren said...

அன்பார்ந்த மாணவ மணிகளே! பாரதியார் பல்கலைக்கழகத்தில் நீங்கள் பெற்ற அனுபவத்தை ஹம்ஸவாணியிடமிருந்து தெரிந்துகொண்டேன். நீங்கள் கேட்ட மற்றும் அனுபவித்த அந்தத் தமிழை நானும் பெற விழைகிறேன்.

Post a Comment